தந்தை செல்வாவின் 120வது ஜனன தின நிகழ்வுகள் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு!
தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 120வது ஜனன தின நிகழ்வுகள், இன்று (சனிக்கிழமை) மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு நல்லையா வீதியில் உள்ள தமிழரசுக்கட்சியின் தலைமையத்தில், பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது தந்தை செல்வாவின் திருவுருவப்படத்திற்கு, மலர்மாலை அணிவிக்கப்பட்டு நினைவுத்தீபம் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன் உட்பட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.