தனிப்பட்டவர்களின் தேர்தல் விருப்பிற்கு ஸ்ரீ.சு.க. பொறுப்புக்கூறாது: தயாசிறி
In இலங்கை January 14, 2019 1:35 pm GMT 0 Comments 1286 by : Ravivarman

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவது தொடர்பில் தனிப்பிட்டவர்களின் கருத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் பொறுப்புக் கூறமுடியாது என அக்கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இவ்விடயம் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி வேட்பாளர் குறித்த கனவு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் பொதுஜன பெரமுன என அனைத்து கட்சிகளிலுமுள்ள உறுப்பினர்களிடமும் காணப்படுகின்றது.
எனினும் இதனைக் காரணமாக வைத்து அனைவரையும் வேட்பாளராக்க முடியாது. கட்சி ரீதியாக கலந்தாலோசித்து அதன்படியே தீர்மானங்களை எடுக்க முடியும். மாறாக தனிப்பட்டவர்களின் விருப்பத்திற்கேற்றவாறு செயற்பட முடியாது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை களமிறக்குவதில் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் உறுதியாக இருக்கின்றோம்” என தயாசிறி ஜயசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.