தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 35பேர் கைது
In இலங்கை December 26, 2020 5:11 am GMT 0 Comments 1384 by : Yuganthini

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 35பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணியத் தவறியமை, சமூக இடைவெளியை பின்பற்றத் தவறியயை ஆகிய குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதியிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 1829 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அஜித் ரோகண சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி செயற்படுவர்களுக்கு எதிராக தொடர்ந்து சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அஜித் ரோகண எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.