தனிமையை எதிர்த்துப் போராடுவதற்கான மூலோபாயத்தைக் கொண்டு வருமாறு அழைப்பு!
In இங்கிலாந்து December 8, 2020 11:01 am GMT 0 Comments 1721 by : Anojkiyan

70க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களும் அமைப்புகளும், தனிமையை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு மூலோபாயத்தைக் கொண்டு வருமாறு வடக்கு அயர்லாந்து நிர்வாகிக்கு அழைப்பு விடுத்துள்ளன.
தனிமையின் சிக்கலைப் புரிந்துக்கொள்ளும் அறிக்கை வெளியானதன் பின்னணியில், இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 தொற்றுநோய்களின் போது, ஐந்து மாத காலப்பகுதியில் தனிமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பிரச்சாரத்தால் இந்த ஆய்வு தொகுக்கப்பட்டது.
இது தனிமை பற்றிய தற்போதைய தரவுகளை ஒன்றிணைத்தது, அமைப்புகளின் கருத்துக்களைத் தேடியது மற்றும் சுமார் 2,000 பேர் இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்டனர்.
நீண்டகால தனிமை வடக்கு அயர்லாந்தில் ஐந்து பேரில் ஒருவரை பாதிக்கும் என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஒவ்வொரு நாளும் தனிமையால் பாதிக்கப்படுவதை அவர்கள் காண்கிறார்கள் என அறிக்கையின் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
தனிமையின் சிக்கலைக் கையாள்வதற்கான பொறுப்பு அரசாங்கத்திடம் உள்ளது என்று அறிக்கை கூறியது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.