தனியார் பாடசாலைகளின் கூடுதல் கல்வி கட்டணத்துக்கு எதிராக நடவடிக்கை
In இந்தியா March 24, 2018 7:18 am GMT 0 Comments 1314 by : Yuganthini

தனியார் பாடசாலைகளில் கூடுதல் கல்வி கட்டணம் அறவிடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, தமிழகத்தின் கல்வியமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தனியார் கல்வி கட்டணம் தொடர்பில் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஓய்வு பெற்ற நீதிபதியை ஆணையாளராக நியமித்து கல்வி கட்டணத்தை சீரமைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தனியார் பாடசாலைகளில் கல்வி கட்டணங்கள் 25 சதவீதம் ஒதுக்கீடு தராமல் இருப்பின் அவர்கள் தொடர்பிலும் கல்வி நடவடிக்கை எடுக்கப்படுமென, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தனியார் பாடசாலைகளுக்கான கல்வி கட்டணத்தை அரசு இணையத்தளத்தில் பிரசுரித்துள்ளது. இந்நிலையில் சில தனியார் பாடசாலைகள் அதற்கு எதிரான முறையில் செயற்படுவதாக முறைபாடுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பான வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் மதுரை கிளை , தனியார் பாடசாலை கல்வி கட்டணத்தை சரியான முறையில் குறிப்பிட்டு ஏப்ரல் 30ஆம் திகதிக்குள் இணையத்தளத்தில் பிரசுரிக்க வேண்டுமென, பாடசாலை கல்விதுறை முதன்மை செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.