தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

அளுத்கம, களுத்துறை பாணந்துறை மற்றும் மொறட்டுவை ஆகிய பகுதிகளிருந்து புறக்கோட்டை வரை சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தூரசேவையில் ஈடுபடும் பேருந்துகள், பயணிகளை ஏற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே, இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பானது, தமது கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும் வரை முன்னெடுக்கப்படும் என தனியார் பேருந்து ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் இந்த விடயம் குறித்து, இலங்கை போக்குவரத்து சபைக்கு ஏற்கனவே முறைப்பாடு செய்ததாகவும் அவர் கூறினார்.
தூரசேவை பேருந்துகளின் நிறுத்துமிடங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்து, அவற்றுக்கு எதிராக அபராதம் விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் தனியார் பேருந்து ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.