தனுஷை வைத்து ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை இயக்கும் செல்வராகவன்

தனுஷை வைத்து ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை இயக்கப் போவதாக செல்வராகவன் அறிவித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, பார்த்திபன், ரீமா சென் உள்ளிட்டோர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குமாறு ரசிகர்கள் செல்வராகவனுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்கிடையே தம்பி தனுஷை வைத்து மீண்டும் படம் எடுக்குமாறும் ரசிகர்கள் செல்வராகவனை கேட்டு வந்தனர். தான் மீண்டும் தனுஷை இயக்கப் போவதாக செல்வராகவன் ட்விட்டரில் சூசகமாக தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் தம்பியுடன் மீண்டும் சேர்ந்து பணியாற்றப் போவதாக செல்வராகவன் அறிவித்துள்ளார். அது ஆயிரத்தில் ஒருவன் 2 படம் ஆகும்.
இது குறித்து செல்வராகவன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
இது வரை கேட்டிருந்த ,காத்திருந்த என் அன்பு உள்ளங்களுக்கு
இதோ உங்கள் முன்னால் @dhanushkraja #a.o2 pic.twitter.com/4siF01hiJL— selvaraghavan (@selvaraghavan) January 1, 2021
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.