தன்சானியா படகு விபத்து: உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு
தன்சானியாவின் விக்ரோரியா ஏரியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 218ஆக அதிகரித்துள்ளது.
கடற்படையின் சுழியோடிகள் தொடர்ந்தும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதோடு, மேலும் பலர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது.
கடந்த 20ஆம் திகதி 300இற்கும் அதிகமானோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் இந்த பேரனர்த்தம் ஏற்பட்டது.
விக்ரோரியா ஏரியில் அமைந்துள்ள மிகப்பெரிய தீவான உகெர்வேயை நோக்கி பயணித்த குறித்த படகு, தரிப்பிடத்தை அடைய சில மீற்றர் தொலைவில் கவிழ்ந்துள்ளது.
அரசாங்கத்திற்கு சொந்தமான இந்தப் படகில் அதிகமானோரை ஏற்றிச் சென்றமையே விபத்திற்கு காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைதுசெய்யுமாறு அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, படகு கவிழ்ந்து இரண்டு நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.