தமிழகத்தின் சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
In இந்தியா November 29, 2020 2:40 am GMT 0 Comments 1351 by : Dhackshala

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகத்தின் சில இடங்களில் டிசம்பர் 2 மற்றும் 3ம் திகதிகளில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்திற்கு டிசம்பர் முதலாம் திகதியில் இருந்து தமிழகத்தின் சில பகுதிகளுக்கு பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த மண்டலமாக மேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 2ஆம் திகதி தமிழகத்தை நெருங்கும் என்றும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களிலும் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.