தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று(சனிக்கிழமை) மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் தென்னிலங்கைப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், தெற்கு உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தென் மாநிலங்களில் இருந்து வரும் 19ஆம் திகதி விலகுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.