தமிழகத்தின் 4 தொகுதிகளுக்கான வேட்பு மனுக்கள் குறித்து பரிசீலனை!
In இந்தியா April 30, 2019 4:12 am GMT 0 Comments 2723 by : Krushnamoorthy Dushanthini

தமிழகத்தின் சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கான வேட்பு மனுதாக்கல் நிறைவடைந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) வேட்புமனுக்கள் குறித்து பரிசீலனை செய்யப்படவுள்ளது.
குறித்த 4 தொகுதிகளிலும் மொத்தம் 221 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதுடன் இந்த தொகுதிகளுக்கு எதிர்வரும் மே மாதம் 19ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதன்படி திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியில் தி.மு.க, அ.தி.மு.க, அ.ம.மு.க மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் சார்பில் 59 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.
அவ்வாறே சூலூர் தொகுதியில் தி.மு.க, நாம் தமிழர் கட்சி, அ.தி.மு.க, அ.ம.மு.க மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் சார்பில் 48 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.
இதேவேளை அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க, அ.தி.மு.க, அ.ம.மு.க, மக்கள் நீதி மய்யம், மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியன சார்பில் 77 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.
அத்துடன் ஒட்டபிடாரம் தொகுதியில் 37 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் இந்த வேட்புமனுக்கள் குறித்து இன்று பரிசீலனை செய்யப்படவுள்ளதுடன், இந்த தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள் எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.