தமிழகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை: ஆளுநர்-முதல்வருக்கிடையில் சந்திப்பு!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
எதிர்வரும் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யுமென இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, கடும் மழைக்கு முகங்கொடுக்கவுள்ள தமிழகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, ஆளுநரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்துரைத்தார்.
வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், நாளை 7ஆம் திகதி முதல் தமிழகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அண்மையில் கேரளாவில் பெய்த கடும் மழை காரணமாக அம்மாநிலமே வரலாறு காணாத அழிவை எதிர்கொண்டிருந்தது.
அத்தோடு கடந்த 2016ஆம் ஆண்டு தமிழகத்தில் பெய்த வரலாறு காணாத மழையினால் சென்னை உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் வெள்ளத்தில் மூழ்கி, அதிகளவான உயிரிழப்புக்களும் பொருட்சேதங்களும் ஏற்பட்டிருந்தன.
அத்தோடு, கடந்த ஆண்டு ஏற்பட்டிருந்த ஓஹி புயலில் பெரும்பாலான மீனவர்கள் காணாமல் போயிருந்ததோடு, பலர் உயிரிழந்தமை தமிழகத்தை உலுக்கி போட்டிருந்து.
இந்நிலையில், தமிழகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை தொடர்பில் மேற்படி ஆலோசனை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.