தமிழகத்தில் அரசியல் கட்சியினர் பிரசாரம் மேற்கொள்ள தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி
In இந்தியா January 19, 2021 8:52 am GMT 0 Comments 1369 by : Dhackshala

கொரோனா அச்சுறுத்தலால் அரசியல் கட்சியினர் பிரசாரம் மேற்கொள்ள தடை விதிக்கக் கோரிய மனுவை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கொரோனாவின் இரண்டாம் அலை மற்றும் உருமாறிய கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில், அரசியல் கட்சியினர் பிரசாரம், பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணி நடத்த தடை விதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு, கொரோனாவை தடுப்பதற்காக அரசு போதுமான அளவு நடவடிக்கையை எடுத்து வருவதாக தெரிவித்தது.
மேலும் இதனால் இதில் எவ்விதமான உத்தரவையும் பிறப்பிக்க இயலாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.