தமிழகத்தில் முதற்கட்டமாக சுகாதாரத் துறையைச் சேர்ந்த 6 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
In இந்தியா January 3, 2021 10:30 am GMT 0 Comments 1411 by : Dhackshala

தமிழகத்தில் முதற்கட்டமாக சுகாதாரத் துறையைச் சேர்ந்த 6 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடத் திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், தமிழகத்தில் முன்னுரிமை மற்றும் ஒதுக்கீடு அடிப்படையில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவித்தார்.
இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பு மருந்தைப் பதப்படுத்திச் சேகரித்து வைக்க வசதி செய்யப்பட்டுள்ளதாகவும்அவர் தெரிவித்தார்.
மேலும் உருமாறிய வைரஸ் தொற்றைக் குணப்படுத்தவும் இதே தடுப்பு மருந்து போதுமானது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.