தமிழகத்தில் திங்கள் முதல் கல்லூரிகள் திறப்பு- கொரோனா தடுப்பு வழிகாட்டலை வெளியிட்டது அரசு

தமிழகத்தில் எதிர்வரும் ஏழாம் திகதி திங்கட்கிழமை முதல், கல்லூரிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்கள் திறக்கப்படவுள்ளன.
கொரோனா பரவலை அடுத்து கடந்த மார்ச் முதல் குறித்த கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் கல்லூரிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதால் கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதன்படி, கல்லூரிகளில் ஆசிரியர்கள், மாணவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என கல்லூரி நிர்வாகங்களை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், வாரத்தில் ஆறு நாட்கள் கல்லூரிகள் செயற்படும் என்றும், தொற்று அறிகுறிகள் இருந்தால் மாணவர்களை அனுமதிக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்துவரும் மாணவர்களை கல்லூரிகளில் அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ள தமிழக அரசு, கல்லூரி விடுதிகளில் ஒரு அறைக்கு ஒரு மாணவர் மட்டுமே தங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.