தமிழகத்தில் நண்பகல் 1 மணி நிலவரப்படி 39.49 சதவீத வாக்குப்பதிவு!

தமிழகத்தில் நண்பகல் 1 மணி நிலவரப்படி 39.49 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுவையிலுள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது.
மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். பல்வேறு இடங்களிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.
இந்நிலையில் தமிழகத்தில் அமைதியாக தேர்தல் நடைபெறுவதாகவும், நண்பகல் 1 மணி நிலவரப்படி 39.49 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.