தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் – மு.க. ஸ்டாலின்
In இந்தியா September 28, 2018 4:46 pm GMT 0 Comments 1375 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

தமிழகத்தில் வேலை இல்லா திண்டாட்டம் நிலவுவதாக குற்றஞ்சாட்டியுள்ள தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், சுமார் ஒரு கோடி இளைஞர்கள் வேலை தேடி அலைந்து திருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“சுமார் 4 லட்சம் பட்டதாரிகளும், சுமார் 3 இலட்சம் முதுநிலை பட்டதாரிகளும் ஆசிரியர் வேலைக்காக காத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிற மாநில முதலமைச்சர்கள் எல்லாம் தமிழகம் வந்து முதலீடு தேடுவதாகவும், ஆனால், தமிழகத்தில் உள்ள தொழில் முனைவோர் எல்லாம் அண்டை மாநிலங்களை நோக்கி செல்கின்றனர்” என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.