தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக் குறிப்பில், ‘2 நாட்களுக்கு வட தமிழகத்தில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என கூறப்பட்டுள்ளது.
சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடனும், காலை நேரங்களில் பனிமூட்டத்துடனும் காணப்படும்.
மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், அங்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.’ என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.