தமிழக சட்டசபையில் நாளை இடைக்கால வரவு செலவுத் திட்டம் தாக்கல்
In இந்தியா February 22, 2021 1:59 pm GMT 0 Comments 1125 by : Jeyachandran Vithushan

தமிழக சட்டசபையில் நாளை இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார்.
2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை நாளை கூடுகிறது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் கூட்டத்தை அடுத்து துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்யவுள்ளார்.
இதனை அடுத்து இடைக்கால வரவு செலவுத் திட்டம் குறித்த விவாதம் தொடர்பாக சபாநாயகர் தலைமையிலான ஆய்வுக் குழு கூடி முடிவெடுக்கும் என தமிழக அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.