தமிழக தேர்தல் : தேர்தல் ஆணையத்துக்கு 2 அதிகாரிகள் நியமனம்!
In இந்தியா February 18, 2021 7:24 am GMT 0 Comments 1197 by : Krushnamoorthy Dushanthini

தமிழகத்தில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் தேர்தல் ஆணையத்துக்கு 2 அதிகாரிகள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தேர்தல் பணிக்கு மாற்றம் செய்துள்ளார்.
வேளாண்மை துறையில் இணை செயலாளராக பணியாற்றிய டி.ஆனந்த், தேர்தல் இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுகாதாரத்துறையில் இணை செயலாளராக பணியாற்றி வந்த அஜய் யாதவ் மாற்றம் செய்யப்பட்டு இணை தலைமை தேர்தல் (ஐ.டி.) அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து மாவட்ட ஆட்சியருடனும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று (வியாழக்கிழமை) மாலை ஆலோசனை நடத்துகிறார்.
ஏப்ரல் இறுதியில் தமிழகத்தில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தேர்தல் ஆணையத்துக்கு 2 அதிகாரிகள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.