தமிழக படகுகள் அரசுடைமை ஆக்கப்பட்டதை மாற்ற முடியாது: யாழ்.நீதவான்

எல்லை தாண்டிவந்த இந்திய படகுகளை அரசுடைமையாக்குமாறு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை இரத்து செய்யுமாறு கோரி, படகு உரிமையாளர்கள் சார்பில் தொடரப்பட்ட மனுவை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
குறித்த வழக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊர்காவற்துறை நீதிமன்றில் நீதிவான், ஏ.யூட்சன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.
இதன்போது விசாரணைகளை முன்னெடுத்த நீதவான், படகுகளுக்கு உரிமைகோருவதற்கு தவணைக் காலம் வழங்கப்பட்டிருந்தும், உரிய கால எல்லைக்குள் யாரும் உரிமை கோராதபடியால், மேற்படி படகு அரசுடமையாக்கப்பட்டதை சுட்டிக்கட்டிய நீதிவான், குறித்த மனுவை தள்ளுபடி செய்தார்.
கடந்த ஜூன் மாதம், நெடுந்தீவு பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்ட குறித்த மூன்று இந்திய இழுவைப் படகுகளை, புதிய கடல்வள பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அரசுடமையாக்குமாறு, கடந்த மாதம் 28 ஆம் திகதி ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகத்திலிருந்து வருகைதந்த குறித்த படகுகளின் உரிமையாளர்கள் மேற்படி தீர்ப்பை இரத்துச்செய்து, மறுபரிசீலனை செய்யுமாறு கோரி, யாழ். ஊர்காவற்றை நீதிமன்றில் கோரிக்கை மனு ஒன்றை தாக்கல் செய்தனர்
எனினும் குறித்த படகுகளை அரசுடமையாக்குவதற்கு முன்னராக, படகு உரிமையாளர்கள் ஆஜராவதற்கான கால அவகாசத்தை யாழ்ப்பாண நீதிமன்றம் கொடுத்திருந்தது.
எனினும் குறித்த காலப்பகுதிக்குள் எவரும் உரிமை கோராத நிலையில், தற்போது விதிக்கப்பட்டுள்ள தீர்ப்பில் மாற்றம் செய்ய முடியாதென கூறிய நீதவான் ஏ.யூட்சன், தமிழக மீனவர்களின் மனுவை ரத்து செய்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.