மீனவர்களை விடுவிக்க இலங்கையிடம் பேசுமாறு முதல்வர் பிரதமரிடம் வலியுறுத்து!

இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில், இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 36 மீனவர்கள் கடந்த 14ஆம் திகதி கைது செய்யப்பட்டதை முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், இப்பிரச்சினை தொடர்பாக இலங்கையின் உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசி மீனவர்கள் விடுதலைக்கும் படகுகள் விடுவிப்புக்கும் வலியுறுத்த வேண்டுமென முதல்வர் பிரதமர் மோடியிடம் கோரியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.