தமிழக மீனவர்கள் 180 பேரை ஆந்திர மீனவர்கள் சிறை பிடித்திருப்பது கண்டனத்திற்குரியது
In ஆந்திரா January 28, 2021 1:14 pm GMT 0 Comments 1516 by : Jeyachandran Vithushan

ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 180 பேரை ஆந்திர மீனவர்கள் சிறை பிடித்திருப்பது கண்டனத்திற்குரியது என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பிற நாட்டு கடல் எல்லைக்குள் நுழையாமல் ஆழ்கடலில் எவர் வேண்டுமானாலும் மீன் பிடிக்கலாம் என்ற பொதுவான விதி நடைமுறையில் இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே ஆந்திர மீனவர்கள் இப்படி நடந்து கொள்வது ஏற்புடையதல்ல என்றும் ஏற்கனவே இதேபோன்று ஆந்திர மீனவர்கள் அத்துமீறி நடந்து கொண்டதில் தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் டி.டி.வி.தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவங்களைக் கவனத்தில் கொண்டு, தமிழக மற்றும் ஆந்திர மாநில அரசாங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இது போன்ற பிரச்னைகள் இனிவரும் காலங்களில் நிகழக்கூடாது என்பதை தமிழக அரசு உறுதி செய்வதோடு, சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.