தமிழக வாக்குப்பதிவு – மயங்கி விழுந்த இருவர் உயிரிழப்பு!

தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், வாக்குச்சாவடியில் 2 முதியவர்கள் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.
நாடாளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள வாக்குச்சாவடியில் முருகேசன் என்ற முதியவர், வாக்களித்துவிட்டு வெளியே வந்ததும் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
அதேபோன்று சேலம் மாவட்டம் வேடப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த முதியவர் கிருஷ்ணனும் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இதன்காரணமாக வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.