தமிழறிஞர் சி.வை. தாமோதரம்பிள்ளையின் 187 ஆவது ஜனன தினம்

சிறுப்பிட்டி தமிழறிஞர் சி.வை.தாமோதரம்பிள்ளையின் 187ஆவது ஜனன தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இன்று (சனிக்கிழமை) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்வில் “இன்றைய சமஷ்டியின் விஸ்தீரணம்” என்ற தலைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நினைவுப் பேருரை ஆற்றவுள்ளார்.
இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.