தமிழ் அரசியல் கைதிகள் பலருக்குக் கொரோனா – ஐ. நா. உயர்ஸ்தானிகரிடம் கஜேந்திரகுமார் முறையீடு
In இலங்கை December 23, 2020 2:42 am GMT 0 Comments 1556 by : Dhackshala

மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பலருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
எனினும் அவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகளோ – உணவு வசதிகளோ ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை என்றும் இதனால் தமிழ் அரசியல் கைதிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் இத்தகைய நிலைமை தொடர்பாக நேரில் ஆராயுமாறு கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் முறையீடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்டு நிர்க்கதி நிலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சென்று பார்வையிடுமாறும் ஐ.நா.உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் கோரியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.