தமிழ் மக்களின் ஆன்மாவில் அரசாங்கம் கைவைத்துள்ளது- மாவை கண்டனம்
யாழ். பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடித்தழித்தது மிகப் பயங்கரமான விடயம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்..
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தமிழ் மக்களின் ஆன்மாவில் அரசாங்கம் கைவைத்துள்ளது எனவும்,. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க அனைத்து தமிழ் மக்களும் ஒன்று திரள வேண்டுமென்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்
பெரும் எண்ணிக்கையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் யாழ். பல்கலைக்கழக நுழைவாயிலில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கி இந்த அருவருக்கத்தக்க, ஈனத்தனமான செயல் அரங்கேறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த நடவடிக்கை குறித்து அதிர்ச்சியும், வேதனையும் வெளியிட்டுள்ள மாவை சேனாதிராசா, உயிரிழந்தவர்களிற்கு அஞ்சலி செலுத்தவும் தடைவிதித்த மிலேச்சத்தனமான ஆட்சியின் நீட்சியே இந்த நடவடிக்கை எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து அனுமதிக்க முடியாது எனவும் இதுகுறித்து அனைத்துகக் கட்சிகள், தரப்புக்களுடன் ஆராய்ந்து வலுவான நடவடிக்கையை எடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ய
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.