தமிழ் மக்களின் கிராமங்களுக்குள் சிலர் காணிகளை பிடிப்பதாக குற்றச்சாட்டு
மன்னார் இரணை இலுப்பைக்குளம் பூசாரிகுளம் பகுதியில் தமிழ் மக்களின் கிராமங்களுக்குள் சிலர் மக்கள் காணிகளை பிடிப்பதாக தெரிவித்து நேற்று(செவ்வாய்கிழமை) குறித்த பகுதியில் குழுமியிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த காணி விடயம் தொடர்பாக வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றுவதால் வழக்கு விசாரணை வழக்கு முடிவுறும் வரை முஸ்லிம் மக்களை அத்துமீறி குறித்த பகுதிகளுக்குள் செல்லவேண்டாம் என நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
எனினும் நீதிமன்றத்தின் தடையுத்தரவையும் மீறி முஸ்லிம் மக்கள் அத்துமீறி தமிழ் மக்களின் காணிகளை துப்பரவு செய்து தென்னை கன்றுகளை நாட்டியுள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.
இக்கிராமத்தில் 45 குடும்பங்கள் வசித்து வருவதாகவும் உப குடும்பங்கள் 15 குடும்பங்கள் காணியற்ற நிலையில் வசித்து வரும் நிலையில் இவ்வாறு அத்துமீறி காணிகளை பிடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் மக்கள் தெரிவித்தனர்.
இந் நிலையில் குறித்த பகுதிக்கு வருகை தந்த கிராம உத்தியோகத்தர் மற்றும் மன்னார் மாவட்ட மடு பொலிஸாரும் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் காட்டுப்பகுதியில் சுமார் 20 ஏக்கர் காணி துப்பரவு செய்யப்பட்டு தென்னங்கன்றுகள் நடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இரு தரப்பினரையும் இன்று மடு பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.