தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தில் தீவிரவாத சந்ததியை உருவாக்க அரசாங்கம் முயற்சி
In இலங்கை January 9, 2021 9:42 am GMT 0 Comments 1686 by : Jeyachandran Vithushan

தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் மீண்டுமொரு புதிய தீவிரவாத சந்ததியை உருவாக்கும் நோக்கில் அரசாங்கம் செயற்படுகின்றது என மங்கள சமரவீர கடுமையாக சாடியுள்ளார்.
முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே குறித்த விடையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெரும்பான்மையினரின் மதவெறிக்கு அடிபணிந்து இறந்தவர்களை அடக்கம் செய்ய முடியாமால் முஸ்லிம்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்றே தற்போது உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்குத் தமிழர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
The government seems determined to create a new generation of extremists amongst the Tamil and Muslim millennials; bowing down to majoritarian bigotry the Muslims have been told that they can’t bury their dead, while the Tamils cannot commemorate their dead. O Sri Lanka !
— Mangala Samaraweera (@MangalaLK) January 9, 2021
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.