தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் மேலும் 10பேருக்கு கொரோனா
In இலங்கை February 15, 2021 9:33 am GMT 0 Comments 1270 by : Yuganthini

தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், குறித்த தொற்றாளர்கள் சேவையாற்றிய 6 வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இத்தகைய சூழ்நிலையிலும் அங்கு பணியாற்றுகின்ற சிலர் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றாமல் செயற்படுவதை அவதானிக்க முடிவதாக பலரும் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.