தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் – நீதிமன்றில் பொலிஸார் பரபரப்பு தகவல்
In இலங்கை April 22, 2019 10:00 am GMT 0 Comments 3586 by : Jeyachandran Vithushan

ஷாங்ரிலா நட்சத்திர ஹொட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர், அவிஸ்ஸாவெல்ல – வெல்லம்பிட்டிய பகுதியில் உள்ள தொழிற்சாலையின் உரிமையாளர் எனவும் பொலிஸார் நீதிமன்றில் தெரியப்படுத்தியுள்ளனர்.
கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 9 பேரும் இன்று (திங்கட்கிழமை) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் பொலிஸார் வழங்கிய அறிக்கையின் பிரகாரம் அவர்களை மே மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.