தற்கொலை குண்டுதாரியின் மகளின் DNA அறிக்கையை பெறுமாறு உத்தரவு!
In இலங்கை May 3, 2019 8:42 am GMT 0 Comments 1897 by : Dhackshala

கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவரை அடையாளம் காண்பதற்கு அவருடைய மகளின் குருதி மாதிரியை பெற்று DNA பரிசோதனை அறிக்கையை பெறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் நீதவான் ரங்க திசாநாயக்க, அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கடந்த 21ஆம் திகதி கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட மொஹமட் அஜாம் மொஹமட் முபாரக் என்பவருடைய மகளின் இரத்த மாதிரிகளை பெற்றுக்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் ஜூன் மாதம் 12ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, கொழும்பு சினமன் கிரென்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட மொஹமட் இப்ராஹிம் இக்பால் அஹமட் என்பவருடைய தாயின் குருதி மாதிரியை பெற்று DNA அறிக்கையை தயாரிக்குமாறும் நீதவான் ரங்க திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.