தற்கொலை குண்டுதாரி இலங்கை அரசிடம் விருது பெற்றவர்!- ஒளிப்படம் வெளியானது
In ஆசிரியர் தெரிவு April 25, 2019 8:52 am GMT 0 Comments 4674 by : Risha
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் இலங்கை அரசாங்கத்திடமிருந்து உயரிய விருது பெற்றவர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்திய சகோதரர்களில் ஒருவரான இன்ஷாஃப் இப்ராஹிம் 2016ஆம் ஆண்டுக்கான அரச ஏற்றுமதி விருதைப் பெற்றவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விருது அக்காலப்பகுதியில் இராஜாங்க அமைச்சராகவிருந்த சுஜீவ சேனசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த ஒளிப்படத்தை பிரித்தானிய ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.
தற்கொலை குண்டுதாரியின் தந்தை இப்ராஹிம் விருதை பெற்றுக்கொள்வதையும், குண்டுதாரியான இன்ஷாஃப் அருகில் நிற்பதையும் குறித்த ஒளிப்படத்தில் காணக்கூடியதாக உள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.