தற்சார்பு இந்தியா திட்டம் சுகாதாரத்துறைக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது – நிர்மலா
In இந்தியா February 1, 2021 9:33 am GMT 0 Comments 1266 by : Krushnamoorthy Dushanthini

மத்திய அரசின் தற்சார்பு இந்தியா திட்டம் சுகாதாரத்துறைக்கும் விரிவுபடுத்தப்படுவதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மத்திய வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்து உரையாற்றி வரும் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “தற்சார்பு இந்தியா அல்லது சுயசார்பு இந்தியா திட்டத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கும் அறிவிப்புகள் வரவு செலவு திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
மத்திய அரசு கடந்த மே மாதத்தில் அறிவித்த சுயசார்பு இந்தியா திட்டம் சுகாதார துறைக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.
அமைச்சர் ஆத்ம நிர்பர் ஸ்வஸ்த் பாரத் (சுயசார்பு ஆரோக்கியத் திட்டம்) என்ற புதிய திட்டம் தொடங்கப்படவுள்ளது. இது தேசிய சுகாதார இயக்கத்திற்கு உறுதுணையாக செயல்படுத்தப்படும்.
இதற்காக அடுத்த 6 ஆண்டுகளில் சுமார் 64 ஆயிரத்து 180 கோடி ரூபாயில் புதிய மத்திய நிதியுதவித் திட்டமான சுயசார்பு ஆரோக்கியத் திட்டம் தொடங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.