தற்சாா்பு இந்தியாவை எண்ணி நேதாஜி பெருமிதம் கொண்டிருப்பார் – மோடி
In இந்தியா January 23, 2021 3:56 am GMT 0 Comments 1390 by : Jeyachandran Vithushan

தற்சாா்பு இந்தியாவை எண்ணி நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் பெருமிதம் கொண்டிருப்பார் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த 1897-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் திகதி பிறந்த நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் பிறந்ததினம் ஆண்டுதோறும் தேசிய வலிமை தினமாக கடைப்பிடிக்கப்படும் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு அவரின் 125-ஆவது பிறந்த தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் மேற்கு வங்கத்தில் இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ள தேசிய வலிமை தின நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார்.
இந்நிலையில் நேதாஜிக்கு மரியாதை செலுத்தி பிரதமர் மோடி ஊடக அறிக்கை ஒன்றினை நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளார்.
வலுவான, நம்பகமான, தற்சார்பு இந்தியாவை எண்ணி நேதாஜி பெருமிதம் கொண்டிருப்பார் என்றும் அதனை பூா்த்தி செய்வதில் அவரின் எண்ணங்ளும், லட்சியங்களும் நமக்கு ஊக்கமளிக்கட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வளா்ச்சிக்கான பாதையில் மக்களின் தேவைகள், ஆசைகள், திறன்களை மையமாக வைத்து அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் வரும் காலங்களில் உலகை மிகச்சிறந்ததாக்க பங்களிக்கும் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.