தலைமுடியை நன்கொடையாக அளித்த பிரான்ஸ் அமைச்சர்!

பிரான்சின் சமத்துவத்திற்கான அமைச்சர் தனது தலைமுடியை ஒரு தொண்டு நடவடிக்கைக்காக நன்கொடையாக அளித்துள்ளார், இது புற்றுநோயுடன் கூடிய பெண்களுக்கு பொய் மயிரை (Wig) தயாரிப்பதற்கு பெரிதும் உதவும் வகையில் உள்ளது.
தமது இந்த நன்கொடை போன்றே அனைவரும் உதவ முன்வர வேண்டும் என்று அமைச்சர் மார்லீன் ஷ்யாப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் எதற்காக தலைமுடியை வெட்டி நன்கொடையை வழங்கினார் என்பதற்கான காரணத்தையும் தனது இணையப்பதிவில் வௌியிட்டுள்ளார், தனது தங்கையொருவரும் ஒவ்வொரு இரண்டாண்டுகளுக்கும் ஒருமுறை இவ்வாறு நன்கொடை வழங்குவதை வழக்கமாக கொண்டிந்தமையால் தனக்கு அந்த உணர்வு ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவச் செலவுகளுக்கு மேலதிகமாக, ஒரு விக்கின் விலை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது என்பதை அமைச்சர் மேற்கோளிட்டார்
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தின் போது இயன்றளவு பல பெண்களுக்கு, அமைச்சர் மார்லீன் ஷ்யாப்பா விழிப்புணர்வை ஏற்படுத்தி அணி சேர்க்கின்றார்.
“பெண்ணொருவர் புற்றுநோயால் பாதிக்கப்படும் போது, மருத்துவச் செலவுகள் மிக துரிதமாக அதிகரிக்கின்ற அதேவேளை, மருத்துவ பராமரிப்புக்கு அப்பால் செல்கிறது” என்று 35 வயதான பிரான்ஸ் அமைச்சர் தனது முகநூல் பக்கத்தில் இளஞ்சிவப்பு ஒக்டோபர் என்ற பதிவில் எழுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.