தவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி
In அறிவியல் April 18, 2019 5:31 pm GMT 0 Comments 7531 by : Krushnamoorthy Dushanthini

டுவிட்டரில் வெளியாகும் தவறான கருத்துக்களால் ஏற்படும் பாதிப்புக்களை தடுக்கும் வகையில் குறித்த தகவல்களை கண்காணிக்க பிரத்தியேக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த குழு ஆய்வுகளை மேற்கொண்டு தீங்கு விளைவிப்பதாக கருதப்பட்ட 38 சதவிகித தகவல்களை டுவிட்டர் குழுக்களுக்கு அனுப்பியுள்ளதுடன், குறித்த தகவலின் படி புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சுமார் ஒரு இலட்சம் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 45 சதவிகிதம் அதிகம் என குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, ஆபாச தரவுகள் அடங்கிய கணக்குகள் மும்மடங்காக நீக்கப்பட்டு, இது குறித்து 24 மணித்தியாலயத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டுவிட்டர் தளம், “எங்களது தொழில்நுட்பத்தை தொடர்ந்து மேம்படுத்தி ஆபத்து நிறைந்த விதிகளை மீறும் தரவுகளை மற்றவர் குறிப்பிடும் முன் அவற்றை வேகமாக நீக்குவதற்கான பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம்.
இத்துடன் தீங்கான தகவல்களை குறிப்பிடும் பயனர்களுக்கு கூடுதல் அம்சங்களை வழங்கி அவற்றின் மீது வேகமாக நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அடுத்த சில வாரங்களில் எங்களது விதிமுறைகளை மாற்ற திட்டமிட்டு இருக்கிறோம். குறுகிய காலக்கட்டம் என்ற போதும் இவை மிக எளிமையானதாகவும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியதாகவும் இருக்கும்” என தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.