தாக்குதல்களின் எதிரொலி – இந்து அறநெறி வகுப்புக்களை நிறுத்துமாறு அறிவுறுத்தல்!
இந்து ஆலயங்களிலும் வேறு மண்டபங்களிலும் நாளை(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ள இந்து அறநெறி வகுப்புக்களை நிறுத்துமாறு அமைச்சர் மனோ கணேசன் ஆலய நிர்வாகங்களிடமும், பொறுப்பாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் வரை இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு இந்து கலாசார அமைச்சர் என்ற வகையில் தான் தயவுடன் கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, நாட்டில் சுமூக நிலை திரும்பும் வரை கிறிஸ்தவ தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனைகளை ஒத்திவைக்குமாறும் கொழும்பு பேராயர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிர்த்த ஞாயிறன்று ஐ.எஸ் தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 250 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 500 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.