தாக்குதல்கள் மேலும் இடம்பெறக்கூடும்: கனடா எச்சரிக்கை
In ஆசிரியர் தெரிவு April 22, 2019 12:53 am GMT 0 Comments 3125 by : adminsrilanka

இலங்கையில் தாக்குதல் சம்பவங்கள் மேலும் இடம்பெறக் கூடுமென கனேடிய வெளிவிவகார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், இலங்கை நாட்டில் தங்கியுள்ள கனேடியர்கள் நடமாட்டத்தை குறைத்துக் கொள்ளுமாறும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பு காரணிகளின் நிமித்தம் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம் இன்றைய தினம் திறக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.