தாயின் மரணச் சடங்கில் கலந்துகொண்ட இரு மகன்கள் உயிரிழப்பு
In இலங்கை December 15, 2020 3:54 am GMT 0 Comments 1872 by : Yuganthini

மீரிகம– கீனதெனிய பகுதியில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட ஸ்பிரித் அடங்கிய ஒருவகை மதுபானத்தை அருந்திய இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஒருவர், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளதாவது, “நேற்று (திங்கட்கிழமை) இரவு, நால்வர் கொண்ட குழுவொன்று மதுசாரம் அருந்தியமை தொடர்பாக எமக்கு தகவல் கிடைத்தது.
இந்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 54 மற்றும் 47 வயதான சகோதரர்களாவர். இவர்கள் தாயின் மரணச்சடங்கின் பின்னர் மதுசாரம் அருந்தியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மீரிகம பொலிஸாரினால் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.