தாய்ப்பால் கொடுக்கும்போதெல்லாம் கண்ணீர் வடிக்கும் தாய்!
In இங்கிலாந்து April 21, 2019 5:30 pm GMT 0 Comments 2180 by : Benitlas

பிரித்தானியாவில் தாய்ப்பால் கொடுக்கும்போதெல்லாம் கண்ணீர் வடிக்கும் தாய் ஒருவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த டீனா டாட் என்கிற 31 வயது பிரித்தானிய தாய், இரண்டாவது குழந்தை பிறந்தது முதலே வினோதமான ஒரு அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானிய மக்களில் அதிகமானோர் இதுகுறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லாதால், மருத்துவ விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் தனக்கு நடந்ததை பற்றி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எனக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததும் மருத்துவமனையில் இருந்த போது தான் அந்த அனுபவம் எனக்கு முதன்முதலாக கிடைத்தது.
நான் என்னுடைய குழந்தை பருவத்தில் முதன்முறையாக பள்ளிக்கு செல்வதை போல உணர்ந்தேன். அடுத்த சில நாட்களில் தான் பயங்கரமான ஒரு உணர்ச்சியை உணர்ந்தேன்.
என்னுடைய குழந்தை இஷாவிற்கு பால் கொடுக்க முயலும் போதெல்லாம் ஒருவிதமான பயமும், கவலையும் என்னுடனே இருந்தது. உணர்ச்சிகள் அதிகரித்தது.
அதை மற்றவர்களிடம் விளக்கி கூற எனக்கு கடினமாக இருந்தது. மற்ற தாய்மார்களிம் நான் கூறும்போது, குடும்பத்தில் வளர்ந்த ஒரு நாயை கொலை செய்வதை போல இருப்பதாக விவரித்தேன்.
அதற்கு பிறகு எப்பொழுதெல்லாம் என்னுடைய மகளுக்கு தாய்ப்பால் கொடுக்கிறானோ, அந்த சமயங்களில் எல்லாம் மனசோர்வும், கவலையும் அதிகரித்தது.
தாய்ப்பால் கொடுப்பது தவறு என்பதை போல உணர்ந்தேன். அந்த உணர்வுகள் எனக்கு அதிகரிக்கும்பொழுது கண்ணீர் வர ஆரம்பித்துவிடும்.
நான் என் மகளை கவனித்துக்கொள்ள வேண்டும் என்று எனக்கு தெரியும். ஆனால் அந்த உணர்ச்சிகளால் நான் கவலையடைந்தேன்.
குழந்தை பெற்றெடுத்த பெண்களுக்கு வரும் மனஅழுத்தம் என்று தான் நாங்கள் முதலில் நினைத்திருந்தோம். இணையத்தில் தேடிப்பார்த்த பிறகு தான், பால் வெளியேற்றம் எதிர்வினை எனப்படும் னு-ஆநுசு-ஆல் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை தெரிந்துகொண்டேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.