தினகரன் அணி மேன்முறையீடு செய்ய முடிவு

தினகரன் அணியின் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டமை சரியானது என உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய தினகரன் அணி முடிவு செய்துள்ளது.
தீர்ப்பு வெளியானதனைத் தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அந்தச் சந்திப்பில் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதா? அல்லது இடைத்தேர்தலை சந்திப்பதா? என்பது குறித்து கலந்தாலோசித்தனர். இடைத்தேர்தலைச் சந்திக்கலாம் என்று ஒருதரப்பினரும் மேன்முறையீடு செய்யலாம் என மற்றொரு தரப்பினரும் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
எனினும் தகுதிநீக்க வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.