திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு – முக்கிய வீரர்கள் நீக்கம்
In கிாிக்கட் April 18, 2019 8:42 am GMT 0 Comments 3210 by : Jeyachandran Vithushan

உலகக்கிண்ண தொடருக்கான திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணி சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அணியில் இருந்து நீரோஷன் டிக்வெல்ல, தினேஷ் சந்திமால், தனுஷ்க குணதிலக்க, உபுல் தரங்க, அகில தஞ்சன்ய ஆகியோர் நீக்கபட்டுள்ளனர்.
அணியின் முழு விபரம் திமுத் கருணாரத்ன, அவிஸ்க பெர்னாண்டோ, லஹிரு திரிமன்னே, குஷால் பெரேரா, குஷால் மெண்டிஸ் அஞ்சலோ மத்தியூஸ், தன்ஜய டி சில்வா ஜெப்ரி வண்டர்சே, திஸ்ஸர பெரேரா, உசுரு உதான, லசித் மலிங்க, சுரங்க லக்மால் நுவன் பிரதீப் ஜீவன் மெண்டிஸ் மிலிந்த ஸ்ரீவர்தன ஆகியோர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி முதல் எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், 45 லீக் போட்டிகள் மற்றும் 3 வெளியேற்று போட்டிகள் என 48 போட்டிகள், சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது.
இந்த உலகக்கிண்ண தொடரில், இங்கிலாந்து அணியே உலகக்கிண்ணத்தை வெல்லும் அணிகளில் முதல்நிலை பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.