திரிபீடகம் நூலினை உலக மரபுரிமையாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!
In இலங்கை January 14, 2019 7:49 am GMT 0 Comments 1210 by : Ravivarman

புனித திரிபீடகம் நூலினை உலக மரபுரிமையாக ஆக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஜனாதிபதியினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த முன்மொழிவுக்கு நேற்று (திங்கட்கிழமை) அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், விரைவில் அது நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
புனித தேரவாத திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக்கும் தேசிய நிகழ்வு 2019 ஜனவரி மாதம் 05 ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாத்தளை அலுவிகாரையில் இடம்பெற்றது.
அந்த நிகழ்வில் திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தியதைப்போன்று அதனை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.