திருகோணமலையில் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு
In இலங்கை November 4, 2018 4:56 pm GMT 0 Comments 1468 by : Ravivarman

சுற்றுலாத்துறை மற்றும் நலனோம்புகை மேம்பாடு தொடர்பாக திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் செயலமர்வு திருகோணமலையில் இடம்பெற்றது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 தொடக்கம் பிற்பகல் 3.00 வரை இடம்பெற்றது. இத்திட்டத்தை அமுல்படுத்தும் வாழ்க்கை தொழில் பயிற்சி நிறுவனத்தின் திட்ட அதிகாரி எஸ்.சதீஸ்குமாரின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இத்திட்டம், அவுஸ்ரேலிய அரச நிதியுதவியுடனும், இலங்கை திறன் அபிவிருத்தி தொழில்பயிற்சி அமைச்சின் பங்களிப்புடனும் செயற்படுத்தப்படுகின்றது.
பெண்களின் திறன்களை மேம்படுத்தி வளர்ச்சியடையச் செய்தல், தொழில் முயற்சியாண்மைக்கு சுற்றுலாத்துறை ஊடான விருத்தி, வருமானத்தை அதிகரித்தல் உள்ளிட்ட பல திட்டங்களை உள்ளடக்கிய விரிவுரைகள் இதில் இடம்பெற்றன.
ஊடகவியலாளர்கள் திருகோணமலை மாட்டத்திலுள்ள சுற்றுலாத்தளங்கள் பற்றிய தகவல்களை ஊடகங்களில் வெளியிட்டு அதனூடாக சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிப்பதும், இதனூடாக இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுதுவதுமே இதன் நோக்கமாகும் என இங்கு தெளிவுபடுத்தப்பட்டது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.