திருகோணமலையில் மேலும் அதிர்வுகள் ஏற்படுமா?: அவதானிக்கும் புவி சரிதவியல் பணியகம்

திருகோணமலையில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு மேலும் அதிர்வுகள் ஏற்படக்கூடுமா என்று அவதானித்து வருவதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
திருகோணமலையில் ஏற்பட்ட இந்த நில அதிர்வையடுத்து அங்கு நிலைமைகள் ஆராயப்படுவதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது. குறித்த நில அதிர்வை மூதூர் மற்றும் கிண்ணியா பகுதிகளைச் சேர்ந்த மக்களும் உணர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இன்று அதிகாலையில் ஏற்பட்ட நில அதிர்வு பல்லேகெலே, மஹகனதராவ பகுதிகளில் முறையே 3.5 மற்றும் 3.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும் பணியகம் தெரிவித்தது.
இதனிடையே இதே சந்தர்ப்பத்தில் இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் பகுதிகளில் 5.1 ரிக்டர் அளவிலான நில அதிர்வு பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.