திருகோணமலை பிரதேச சபையின் புதிய தவிசாளர் கடமைகளை பொறுப்பேற்றார்
In இலங்கை January 20, 2021 2:54 am GMT 0 Comments 1308 by : Yuganthini
கடந்த 25 வருட காலத்திற்கும் அதிகமாக தமிழர்கள் வசமிருந்த திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் ஆட்சி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசமானது.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் புதிய தவிசாளர் சந்துன் ரத்நாயக்க, நேற்று (செவ்வாய்க்கிழமை) தன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
நேற்று காலை சுப வேளையில் கையொப்பமிட்டு, தனது கடமைகளை திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் சமயத் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பங்கேற்றிருந்தனர்.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டு இருந்த நிலையில் புதிய தவிசாளருக்கான தெரிவு உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட திறந்த வாக்கெடுப்பின்போது ஶ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் சந்துன் ரத்னாயக்க, புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.