திருச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும் – எடப்பாடி!
In இந்தியா April 21, 2019 6:18 pm GMT 0 Comments 2729 by : Krushnamoorthy Dushanthini

திருச்சி கோயில் திருவிழாவில் சிக்கி உயிரிழந்த 7 பேருக்கு 1 இலட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிவாரண தொகை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் முத்தையம்பாளையத்தில் இடம்பெற்ற சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு விசேட பூஜை வழிப்பாடுகள் இடம்பெற்றதுடன், மூன்றாம் நாள் பூஜை இடம்பெற்ற வேளையில் கூட்ட நெருசலில் சிக்கி எழுவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.