திருடப்பட்ட கார் விபத்துக்குள்ளானது – சந்தேகநபர் கைது!
In கனடா October 17, 2018 9:16 am GMT 0 Comments 1294 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

திருடப்பட்ட கார் ஒன்று வடக்கு எட்மன்டன் பகுதியில் உள்ள வாகன திருத்துமிடத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது நேற்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 2.30 மணியளவில் 81 ஸ்ட்ரீட் மற்றும் 128A அவென்யூ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் வாகனத்தை திருடிக்கொண்டு செல்வதாக தகவல் வழங்கப்பட்டதை அடுத்து கேனன் யூனிட் அந்த காரின் கண்காணிப்பை கண்டறிந்தது.
இருந்த போதும் கார் வாகன திருத்துமிடத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக கண்டறிந்ததை அடுத்து அங்கு சென்ற பொலிஸார் குறித்த நபரை கைது செய்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக எட்மன்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.