News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • டெல்லியில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
  • நிபந்தனையின்றி இந்தியாவுக்கு உதவ தயார் – இஸ்ரேல்
  • சம்பியன்ஸ் லீக்: முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி
  • முத்தலாக் தடை சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
  • மாகாண சபைத் தேர்தல் குறித்து முக்கிய கூட்டம்
  1. முகப்பு
  2. இலங்கை
  3. திருடர்களை பாதுகாக்கிறது ஐ.தே.க : அசாத் சாலி குற்றச்சாட்டு

திருடர்களை பாதுகாக்கிறது ஐ.தே.க : அசாத் சாலி குற்றச்சாட்டு

In இலங்கை     January 24, 2018 5:59 am GMT     0 Comments     1798     by : Varshini

அரசாங்கம் பதவியேற்ற மூன்று வருடங்களில், கொழும்பில் எந்தவித அபிவிருத்திப்பணிகளும் முன்னெடுக்கப்படவில்லையென கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடும் அசாத் சாலி தெரிவித்துள்ளார். மாறாக திருடர்களை பாதுகாக்கும் வேலையை மாத்திரமே ஐ.தே.க. செய்துகொண்டிருக்கின்றதென அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான அறிக்கை தொடர்பாக எமது ஆதவன் செய்தியாளரின் கேள்விகளுக்கு   பதிலளிக்கும்போதே, அவர் மேற்குறித்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

கடந்த 2008ஆம் ஆண்டு தொடக்கம் 4000 பில்லியன் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதென அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறிய அசாத் சாலி, யார் திருடியிருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது அவசியமெனக் குறிப்பிட்டார்.

அத்தோடு, ஜனாதிபதி மைத்திரி ஐ.தே.க. மீது தற்போது பகிரங்கமாக குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதால் தேர்தலுக்குப் பின்னர் கூட்டரசாங்கத்தில் பாதிப்பு ஏற்படாதா என எமது ஆதவன் செய்தியாளர் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அசாத் சாலி கூட்டரசாங்கத்தை  எந்தவகையிலும் பாதிக்காதென்றும் ஐ.தே.க.வில் உள்ள நல்ல மனிதர்கள் ஜனாதிபதியின் செயற்பாடுகளை விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

அத்தோடு, முறிகள் மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மீது மாத்திரம் ஐ.தே.க. பழிபோடுவது தவறென்றும் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரசிங்க மற்றும் கபீர் ஹாசிம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவிலும் நாடாளுமன்றத்திலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முரணான கருத்துக்களையே முன்வைத்துள்ளாரென குறிப்பிட்ட அசாத் சாலி, ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகளை மீண்டும் ஒருதடவை ஆராய்ந்து பார்ப்பது சிறந்ததெனவும் கூறினார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • கட்சி தலைவர் கூட்டத்தில் மாகாண சபை தேர்தல் குறித்து தீர்மானம்!  

    மாகாண சபை தேர்தல் குறித்து நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ள கட்சி தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள

  • அரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி  

    நாட்டின் அரசியலில் தீவிர மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவி

  • சுதந்திரக் கட்சிக்கே தேர்தலை பிற்போடுவதற்கான தேவை உள்ளது – கிரியெல்ல  

    ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கே தேர்தலை பிற்போடுவதற்கான தேவை உள்ளது என அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெ

  • மத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் – சம்பிக்க  

    ஒரு சில மத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே பிரச்சினைகளை தீர்க்கும் விடையத்தில் முட்டுக்கட்டையா இருக்

  • கோட்டா வேட்பாளரானாலும் அச்சம் இல்லை – ஐ.தே.க  

    ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட்டால் கூட அது ஐக்கிய தேசிய கட்சிக்கு சவாலாக இருக்கப


#Tags

  • asath saley
  • Ravi Karunanayake
  • SLFP
  • UNP
  • அசாத் சாலி
  • ரவி கருணாநாயக்க
  • ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
    பிந்திய செய்திகள்
  • சம்பியன்ஸ் லீக்: முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி
    சம்பியன்ஸ் லீக்: முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி
  • முத்தலாக் தடை சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
    முத்தலாக் தடை சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
  • மாகாண சபைத் தேர்தல் குறித்து முக்கிய கூட்டம்
    மாகாண சபைத் தேர்தல் குறித்து முக்கிய கூட்டம்
  • வடகொரியா மீது அழுத்தம் பிரயோகிக்க போவதில்லை: ஜனாதிபதி ட்ரம்ப்
    வடகொரியா மீது அழுத்தம் பிரயோகிக்க போவதில்லை: ஜனாதிபதி ட்ரம்ப்
  • இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல்
    இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல்
  • பிரான்ஸில் யூத கல்லறைகள் உடைப்பு
    பிரான்ஸில் யூத கல்லறைகள் உடைப்பு
  • யாழில் ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது
    யாழில் ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது
  • இந்தியா – பாகிஸ்தான் பதற்றமான நிலைமை: ஐ.நா கண்டனம்
    இந்தியா – பாகிஸ்தான் பதற்றமான நிலைமை: ஐ.நா கண்டனம்
  • புதிய சட்ட முன்மொழிவுகளை பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்வைக்கும்: பிரெக்ஸிற் அமைச்சர்
    புதிய சட்ட முன்மொழிவுகளை பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்வைக்கும்: பிரெக்ஸிற் அமைச்சர்
  • புல்வாமா தாக்குதலுடன் பாகிஸ்தான் தொடர்பு!- இந்தியாவிடம் வலுவான ஆதாரங்கள்
    புல்வாமா தாக்குதலுடன் பாகிஸ்தான் தொடர்பு!- இந்தியாவிடம் வலுவான ஆதாரங்கள்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.